ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல்

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முறை வலியுறுத்தி வருகிறார். இதனிடையே சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் புதினும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.இதைத் தொடர்ந்துஉக்ரைன் போர் நிறுத்தப் பிரச்சினை குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதத்தில் டெல்லி வர திட்டமிட்டுள்ளார். அவரது இந்தியப் பயணத்திற்கான தேதியைத் தீர்மானிக்கும் நோக்கில், இந்தியா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார்.

Related Stories: