திருவாரூர்: ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக 2015ல் நடந்த போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி சொத்தை சேதப்படுத்திய வழக்கில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, பி.ஆர். பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக, அவர் மீது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், பி.ஆர். பாண்டியன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
