சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்பெயின் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியா, 7 முறை பட்டம் வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியுடன் மோதியது. இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி, 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதையடுத்து, ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள், 10ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. அதே நாளில் நடக்கும் போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள், 3 மற்றும் 4ம் இடத்துக்கான போட்டியில் மோதவுள்ளன.
