×

கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

 

கந்தர்வகோட்டை, டிச.7: கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திருச்சி – பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவ மனை அருகே வெண்கலத்தில் ஆன அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்கபட்டு பராமரித்து வரபடுகிறது. இந்தியவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரும் அரசியல் அமைப்பு சட்டதை வடிவமைந்த வருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 69 நினைவு நாளில் பல்வேறு கட்சியினர் மற்றும் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் மலர்மாலை அணிவித்து மரியதை செலுத்தினர். கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

Tags : Ambedkar Memorial Day ,Gandharvakottai ,Trichy-Pattukottai road ,Gandharvakottai, Pudukottai district ,
× RELATED பெல் நிறுவன பிரிவுகளுக்குள்...