வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு 11ம் தேதி வரை மழை பெய்யும்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், சென்னை, கோவை, நீலகிரி, கடலூர், தர்மபுரி, ஈரோடு,கரூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதே நிலை 11ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: