சென்னை: மழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதை ஈடுகட்டும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கு கடந்த 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாளை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளும் 6ம் தேதியில் செயல்படும். இந்த நாளில் புதன்கிழமை பாட வேளையை பின்பற்றி முழு பணி நாளாகக் கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
