ஆதமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலம் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கலசபாக்கம், ஜன.13: கலசபாக்கம் அருகே கடலாடி ஆதமங்கலம் கிராமங்களில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலசபாக்கம் வட்டத்தில் எருது விடும் விழா மார்கழி 1ம் தேதி முதல் தை மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஆதமங்கலம் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் எருதுகளின் கொண்டையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை எடுப்பதில் போட்டி போட்டனர். அதேபோல் பெண்களும் தங்கள் பணி சுமைகளை மறந்து பொழுது போக்கிற்காக அலங்கரிக்கப்பட்ட எருதுகள் ஓடுவதை இல்லத்தரசிகள் கண்டுகளித்தனர். கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Related Stories:

>