கஞ்சா விற்ற 3 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை அருகே வாலிபர் ஒருவரை கஞ்சா  போதையில் 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என மீஞ்சூர் பஜார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து எஸ்பி அரவிந்தன்  உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா மேற்பார்வையில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார்  விசாரித்தனர்.

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் சிலர் கஞ்சா பாக்கெட்டுகளை விற்று கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்குவது தெரியவந்தது. இதுதொடர்பாக, மீஞ்சூர் தனிப்படை போலீசார் வல்லூர்  செம்மொழி நகரை சேர்ந்த அரி ரமேஷ்(24). ஏ.சீமாபுரம் ஊராட்சி லட்சுமிபுரம் முதல் தெருவை சேர்ந்த மாதேஷ்(21). மீஞ்சூர் புதுப்பேடு செங்கல்வராயன் தெருவை சேர்ந்த தீபக்(20) ஆகிய 3 பேரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>