மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பு மிக்க திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் புகழாரம்

சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவர் ரெ.தங்கம் அறிக்கை: கலைஞர் ஆட்சியில் ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டியும், அவர்களுக்கென தனித்துறையைக் கண்டு, தனி நல வாரியம் அமைத்தும், அத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வாரி வழங்கி மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் இன்றும் நீங்க அகல் விளக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மலர பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ந்து அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வரலாற்றில் இடம்பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

Related Stories: