சென்னையில் கனமழை பெய்து வந்தாலும் ஆவின் பால் தடையின்றி விநியோகம்: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வந்தாலும் ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் தினமும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று காலை முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் விநியோகத்தில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தொடர் மழை பெய்தாலும் பால் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: