டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். வங்கதேச மறைந்த அதிபர் ஜியா உர் ரஹ்மானின் மனைவியும் தேசியவாத கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான கலீதா ஜியா (80) உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதயம் மற்றும் நுரையீரலை பாதிக்கும் மார்பு தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது. இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கட்சியின் பொது செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் கூறுகையில், கட்சியின் தலைவர் குணமடைவதற்கு நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகின்றது. மருத்துவர்கள் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். \\” என்று தெரிவித்துள்ளார்.
