வெனிசுலா வான்வெளி மூடல்: டிரம்ப் அறிவிப்பு: தாக்குதல் நடத்த திட்டமா?

 

வெஸ்ட் பாம் பீச்: போதைப்பொருள் கடத்தலை வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக இரு தலைவர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதுமட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல் படகுகளை பிடிக்க கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க கடற்படை தீவிர வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘விமானிகள், விமான நிறுவனங்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மனித கடத்தல்காரர்கள் என அனைவரும் வெனிசுலா வான்வெளி முழுமையாக மூடப்பட்டதாக கருத வேண்டும்’’ என எச்சரித்துள்ளார். டிரம்ப்பின் இந்த எச்சரிக்கையால் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போகிறதா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: