வடகிழக்கு பருவமழை: கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: உயர்கல்வித் துறை செயலர் சங்கர், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டும். முதலுதவி குழு, தகவல் தொடர்பு அலுவலர், காவலர் மற்றும் தீயணைப்பு சேவைகள், மருத்துவமனை, அவசர சிகிச்சை மையங்கள், போக்குவரத்து சேவைகள் குறித்த விவரங்களை கல்லூரி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும்.

மின்சாதனங்கள் முறையாக இல்லையெனில், மின்சார வாரியத்துக்கு தொடர்பு கொண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான கட்டிடங்களை உடனே சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: