சிவகங்கையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருத்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழத்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

Related Stories: