×

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, நவ. 29: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கறம்ப விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று மாலை வயலில் மேயந்துகொண்டிருந்தபோது அருகில் உள்ள கிணற்றுள் தவறி விழுந்துவிட்டது.

அதையறிந்ததும் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவறந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாபில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Karambakudi ,Parthiban ,Karamba Nathala ,Pudukkottai district ,Karambakudi fire brigade ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...