ஐடிஐயில் காலியிடங்களுக்கான சேர்க்கை 16ம்தேதி வரை நடக்கிறது பெரம்பலூர் அருகே இயற்கை பிரசவ சிகிச்சையால் சிசுவும், தாயும் இறந்த பரிதாபம்

திருச்சி, ஜன.11: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பகுதியை சேர்ந்த விஜயவர்மன் மனைவி அழகம்மாள். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பமாகி உள்ளார். இதையறிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் நேரில் வந்து முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் விஜயவர்மன் அக்குபஞ்சர் படித்துள்ளதால் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளதால் கணவரின் பேச்சை ஏற்றுக்கொண்டு மருத்துவ மனைக்குச்செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையறிந்த சுகாதாரத் துறையினரும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு போலீசாரிடம் பதிலளித்த விஜயவர்மன் அழகம்மாள் தம்பதியினர், குழந்தை பிறப்பில் எந்தவித அசம்பாவிதம் நேர்ந்தாலும், விபரீதங்கள் ஏற்பட்டாலும் அதற்கு எங்கள் பகுதி சுகாதாரத் துறையினர் பொறுப்பல்ல என எழுதி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகம்மாளுக்குக் கடும் வயிற்றுவலி ஏற்படவே பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் குழந்தை வயிற்றிலேயே இறந்து அழுகிய நிலையில் இருப்பதால், டெலிவரியில் சிக்கல் இருப்பது தெரியவந்தது.மேலும் அழகம்மாளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் தாயையாவது காப்பாற்ற மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். ஆனால் திருச்சிக்கு செல்லும் வழியிலேயே அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்ப வம் தொடர்பான புகாரின் பேரில், அரும்பாவூர் போலீ சார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவம னையை உதாசீனப்படுத்தி அரைகுறை வைத்தியத்தை நம்பி இருந்ததால் ஏற் பட்டவிளைவு காரணமாக ஒரு தாயை சிசுவோடு பறிகொடுத்தச் சம்பவம் பூலா ம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, ஜன.11: திருச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2020 சேர்க்கைக்கான இடங்கள் ஆன்லைன் மூலம் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வில் நிரப்பப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள காலி சேர்க்கை இடங்களுக்கு கடந்த மாதம் டிச.12ம்தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற்றது. தற்போது அதில் மீதமுள்ள காலி சேர்க்கை இடங்களுக்கு 16.1.2021 வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

Related Stories: