கொல்லப்பட்டதாக வதந்தி இம்ரான் கான் சிறையில் நலமுடன் இருக்கிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) பல்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த 2023 முதல் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் உள்ளார். கடந்த 6 வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க அவரது 3 சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சிறையில் இம்ரான் கான் கொல்லப்பட்டதாக எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் தகவல் தீயாக பரவியது.

இது முற்றிலும் தவறான தகவல் என அடியாலா சிறை நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிடிஐ கட்சி தலைவரான இம்ரான் கான் சிறையில் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: