வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம்; வழக்குகளை ரத்து கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்த போது, காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். 8 மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Related Stories: