துறைமுக போக்குவரத்து மேலாண்மை சென்னை ஐஐடியில் உருவாக்கம்

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக துறைமுகங்களுக்கான உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இந்திய கடல்சார் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உள்நாட்டு மயமாக்குவதற்கு இந்த அமைப்பு பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன் இறக்குமதிகளை சார்ந்திருப்பதையும் குறைக்க செய்யும்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசு மூல குறியீடு, தரவுத்தளங்கள் மற்றும் தீர்வின் அம்சங்கள் மீது முழுமையான மற்றும் உத்திசார் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. அரசாங்கத்திடம் உடனடியாகக் கிடைக்கும் தொழில்நுட்ப கற்றறிவைக் கொண்டு, அதிநவீன தத்துவம் சார்ந்த, நடைமுறை அறிவைக் கொண்ட திறமையான மனிதவளக் குழுவை நாடு உருவாக்க முடியும் என ஐஐடி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் தலைவர் முரளி கூறுகையில், ‘‘புதிய கப்பல் போக்குவரத்து அமைப்பு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்களால் ஏற்படும் தகவல் கசிவு குறைக்கப்படும். இந்த அமைப்பில், ரேடார் மற்றும் குரல் தரவின் அடிப்படையில் தானாக இயங்கும் யூசர் இன்டர்பேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து உள்நுழைவு மற்றும் வெளியே செல்லும் கப்பல்கள் தொடர்பான விவரங்களை இதன் மூலம் கண்காணித்துக் கொள்ள முடியும்’’ என்றார்.

Related Stories: