பேரூர் உடையாபட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி டாஸ்மாக் கடை அகற்றம்

தோகைமலை, நவ, 26: பேரூர் உடையாபட்டியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி டாஸ்மாக் கடை அகற்றியதையடுத்து போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு. தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டி கடைவீதியில் பள்ளி குழந்தைகளுக்கு இடையூராக, அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த மினி மதுபானக்கடையை தினகரன் செய்தி எதிரொலியால் தோகைமலை போலீசார் அதிரடியாக அகற்றியதால் பொதுமக்கள் பாராட்டு தொரிவித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டி கடைவீதியில் அரசு அனுமதி இல்லாமல் மினி மதுபானக்கடை சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. பேரூர் உடையாபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைபள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் முக்கிய கோவில்களுக்கு செல்லும் முக்கிய மெயின் ரோட்டில், அரசு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட மதுபானக்கடையை, தொடங்கப்படும் போதே பொதுமக்கள் எதிர்பபு தெரிவித்து வந்தனர்.

ஆனால் தொடர்ந்து பேரூர் கடைவீதியிலேயே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக இப்பகுதியினர் கூறி வந்தனர். இந்த பகுதியில் ஏற்கனவே அரசு அனுமதி பெற்ற கடை எண் 5048 என்ற மதுபானக்கடை செயல்பட்டு வந்ததால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் குடி மகன்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு காவல்நிலையத்திற்கு புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கு பதிவுகளும் போடப்பட்டு வந்ததாகவும் தொரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ஏற்கனவே இருந்த அரசு மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி இப்பகுதியினர் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், போஸ்டர்கள் ஒட்டியும், கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனால் பேரூர் கடைவீதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடையை, கள்ளை ரோட்டில் ஒதுக்கு புறத்தில் மாற்றி அமைத்தனர்.

இந்நிலையில் பேரூர் கடைவீதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடை அருகில், அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மினி மதுபானக்கடையை தொடங்கினர். இதனால் மீண்டும் குடிமகன்களின் தொல்லை தினந்தோறும் அறங்கேறி வந்ததாக கூறிவந்தனர். இந்த அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக தொடங்கிய கடையில் பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மதுபானங்களை கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்து வந்ததாகவும் இந்த பகுதி பொதுமக்கள் தொரிவித்து வந்தனர்.

இதனால் வெளியூர் பகுதிகளில் இருந்து பல்வேறு அடையாளம் தொரியாத நபர்கள் அனுமதி பெறாத மதுபானக்கடைக்கு வந்து சென்றதால், பேரூர் கடைவீதில் செயல்பட்டு வரும் வணிகக் கடைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக தொரிவித்தனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டி கடைவீதில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மினி மதுபானக்கடையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 23ஆம் தேதி அன்று வெளிவந்தது.

இதன் எதிரொலியால் மாவட்ட நிர்வாகம் உத்தரவை அடுத்து தோகைமலை எஸ்ஐ பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேரூர் கடைவீதில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மினி மதுபானக்கடையினை அகற்றினர். மேலும் மினி மதுபானக்கடை நடத்திய நபர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், தோகைமலை போலீசாருக்கும், செய்தி வெளியட்ட தினகரன் நாளிதழுக்கும் இப்பகுதி பொதுமக்கள் நன்றி தொரிவித்து பாராட்டினர்.

Related Stories: