கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிக்க வேண்டும்

கரூர், நவ. 29: கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சியில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், வெங்ககல்பட்டி, இனாம்கரூர் போன்ற பல்வேறு பகுதிகள் புறநகர்ப்பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பல்வேறு தொந்தரவுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகராட்சியின் புறநகர்ப்பகுதியில் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று அபேட் மருந்து தெளிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி உள்ளனர்.

 

Related Stories: