சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஆர்டிஇ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
