புதினா-தயிர் பச்சடி

தேவையானவை:

புதினா – 1 கட்டு,
பச்சை மிளகாய் – 4,
கெட்டித் தயிர் – ½ கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
கடுகு – ½ டீஸ்பூன்.

செய்முறை:

புதினாவையும், பச்சை மிளகாயையும் மைப்போல அரைத்து கெட்டித் தயிரில் கலந்து உப்பு சேர்க்கவும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டவும். சுவை அபாரம்.