மிளகு வடை ப்ரிமிக்ஸ்

தேவையானவை:

முழு வெள்ளை உளுந்து – 1½ கப்,
பச்சரிசி – 8 டேபிள்ஸ்பூன்,
மிளகு, சீரகம் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்தினை லேசாக வறுத்து தட்டில் கொட்டவும். பிறகு அரிசி, மிளகு, சீரகம் இவற்றையும் லேசாக வறுக்கவும். வறுத்த அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும். மிளகு வடை ப்ரிமிக்ஸ் எடுத்து நீர் விட்டுக் கெட்டியாக பிசைந்து ஒரு வெள்ளை துணியை நனைத்து அதில் பிசைந்த மாவினை எடுத்து வடைகளாக தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுத்தால் வடைதயார்.