சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து பாஜக தலைமை விளக்கம் கேட்டுள்ளது. பாஜக சார்பில் 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொகுதிகளுக்கும் சென்று தனது சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் டெல்லி பாஜக தலைமை நயினார் நாகேந்திரனுக்கு திடீர் அழைப்பு விடுத்தது.
இதனை அடுத்த, இன்று மதுரையில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார். மதியம் 12.30 மணியளவில் டெல்லி செல்லக்கூடிய நயினார் நாகேந்திரனை பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிஎல் சந்தோஷ் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருக்கிறார். இந்த முக்கிய சந்திப்பின் பொழுது கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய சுற்றுப்பயணத்தினுடைய தாக்கம் குறித்து அவர்கள் விளக்கம் கேட்க இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக டெல்லி பாஜக தலைமைக்கு சுற்றுப்பயணத்தினுடைய தகவல் என்பது நெகட்டிவ்வாக வந்திருப்பதான் காரணமாகத்தான் நயினார் நாகேந்திரனை டெல்லி அழைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினுடைய பங்கு எந்தளவுக்கு இருக்கிறது. அவர்கள் ஒத்துழைப்பும் அதைப்போன்று கூட்டணி தலைவர்களுடை பங்களிப்பும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேட்க இருக்கிறார்கள். இதற்காக இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை சுற்றிப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக பெரும் தாக்கம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அதேபோல் பொதுமக்களினுடைய கூட்டமும், பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுடைய கூட்டமும் பெருமளவு இல்லை என்பதே யாத்திரை முழுவதும் நெகடிவ்வாக இருப்பதாக ரிப்போர்ட் வந்திருக்கிறது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக பாஜக மாநில தலைமை என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நயினார் நாகேந்திரன் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தான ஆலோசனைகளை பிஎல் சந்தோஷ் மற்றும் அமித்ஷா இருவரையும் சந்தித்து ஆலோனை பெற டெல்லி சென்று இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டது.
