சென்னை: தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக மழை வாய்ப்பு குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, வங்க கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால், இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
