மதுரையின் வளர்ச்சிக்கு எதிரான தடைகற்களை தகர்த்தெறிவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடை கற்களை தகர்த்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோவையில் நேற்று முன்தினமும், நேற்று மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் மதுரையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எய்ம்ஸ்-உம் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர். அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக் கற்களை தகர்த்தெறிவோம்.

Related Stories: