புதினா ரசம்

தேவையானவை:

புதினா – ஒரு கட்டு (புதினாவை நன்றாக கழுவி நிழலில் காயவைத்து பொடி செய்தது),
தக்காளி – 3 பெரியது,
பச்சை மிளகாய் – 5,
ரசப்பொடி – 2 ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி – சிறிது,
வேகவைத்த பருப்பு தண்ணீர் – 4 கப்,
எலுமிச்சைச் சாறு – 1 கப்,
நெய், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
கடுகு – ½ டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, உப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு பருப்பு நீர் சேர்த்து இறக்கி விடவும். பின் வாணலியில் நெய் விட்டு புதினா பொடியில் 4 ஸ்பூன் போட்டு வறுத்து உடனே ரசத்தில் கொட்டவும். கடுகு தாளித்துக் கொட்டவும். கொஞ்சம் ஆறிய பிறகு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.