எடப்பாடியே சொல்லிட்டாரு… கூட்டணிஆட்சிக்கு வாய்ப்பில்லை: அதிமுக எம்.பி. திட்டவட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி வருவது இயல்பு தான். கடந்த கால தேர்தல்களில் ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக கூட்டணி வைத்து தான் ஆட்சி செய்தனர். ஆனால், கூட்டணி ஆட்சி நடத்தப்படவில்லை.

கூட்டு அமைச்சரவை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு. ஆட்சியை அதிமுக தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். அதிமுக தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு அமைச்சரவையை ஏற்கமாட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: