விவசாயிகள் ஏமாற்றம் பொங்கல் பரிசுதொகுப்பில் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை வழங்கியதால் மக்கள் அதிருப்தி

க.பரமத்தி, ஜன.7: கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்க மாவட்ட நிர்வாத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அந்தந்த பகுதி முக்கிய நிர்வாகிகளால் தொடங்கி வைக்கப்பட்டு பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை என தலா ஒரு கிலோ, கரும்பு ஒன்று, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொட்டலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2ஆயிரத்து500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த திமுக ஆட்சி காலத்தில் பச்சரிசி, குண்டு வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுகளாகவே பச்சரிசி, குண்டு வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை வழங்கப்படுகிறது. அத்தோடுபொங்கல் பரிசாக இந்தாண்டு ரூ.2ஆயிரத்து 500வழங்கப்படுகிறது. இந்த சர்க்கரையை வைத்து எப்படி பொங்கல் வைக்க முடியும் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் வெளி மார்கெட்டில் குண்டு வெல்லம் தனியார் கடைகளில் வாங்க வேண்டியதாய் உள்ளது என இல்லத்தரசிகள் பலரும் கூறுகின்றனர். எனவே வரும் ஆண்டிலாவது குண்டு வெல்லம் வழங்க அரசு முன்வர வேண்டும் என பயனாளிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: