மினி கிளினிக் திறப்பு

பொன்னேரி: பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் சோம்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் மினி கிளினிக் திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் முன்னதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால் வரவேற்றார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பொன்னையா தலைமை ஏற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். சோம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகணாவதி ராஜாராம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பொன்னேரி ஆர்டிஒ செல்வம், தாசில்தார் மணிகண்டன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: