கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்: 4 பேர் பலி, 27 பேர் காயம்

கீவ்:ரஷ்யா -உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 430 டிரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்தது. அஜர்பைஜான் தூதரகம் ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயமடைந்தனர்.

Related Stories: