மேலூர்-திருப்புத்தூர் ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

மதுரை, ஜன. 6: மதுரை சர்வேயர்காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரராஜ் நேற்று  கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அம்மனுவில், ‘மதுரை மாவட்டம் மேலூர் முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கீழவளவு, இ.மலம்பட்டி, கோவில்பட்டி, கொங்ககம்பட்டி விலக்கு உள்ளிட்ட பல இடங்களில் ரோடு சிதைந்து பெரிய அளவில் பள்ளம் மேடாக உள்ளது. பல மாதமாக இருந்த இந்த பள்ளம் தற்போது பெய்து மழைக்கு மேலும் கூடுதல் பள்ளமாக மாறிவிட்டது.

இது வாகனபோக்குவரத்துக்கு பெரும் தடையாக உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறையிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை வரவுள்ளதால், பொதுமக்கள் அதிகளவில் இந்த ரோட்டை பயன்படுத்த வேண்டி வரும். எனவே உடனே இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: