திருச்சி மாவட்டத்தில்

திருச்சி, ஜன.5: திருச்சி மாவட்டத்தில் 1,225 ரேஷன் கடைகள் மூலம் 8,04,260 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் தலா ரூ.2,500 வழங்கும் விழா பாலக்கரை மற்றும் பெட்டவாய்த்தலையில் நேற்று நடந்தது.

திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர்கள் சுற்றுலாத்துறை வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு நடப்பாண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் 8,04,260 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.201.06 கோடி ரொக்க பணமும், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, முழு கரும்பு ஒன்று, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், துணிப் பை ஆகிய பொருட்கள் ரூ.13.4.கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.214.46 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.

மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது. மேலும், சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருந்து அதனை அரிசி கார்டாக மாற்றம் செய்ய விண்ணப்பத்த ரேஷன் கார்டுதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதன்படி அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விண்ணப்பித்த அனைவரும் பயனடைவர்’ என்றார். அமைச்சர் வளர்மதி கூறுகையில், ‘பொங்கல் பரிசு வழங்க திருச்சி மாவட்டத்துக்கு 8,04,260 முழு கரும்பும், 16,085 கிலோ முந்திரி, 16,085 திராட்சை, 4021 ஏலக்காய் வாங்கி பயன்படுத்தப்படுகிறது’ என்றார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை தலைவர் சகாதேவ்பாண்டியன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் நடேசன், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் வானதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ரூ.214.46 கோடியில் பொங்கல் பரிசு பொருட்கள் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் தகவல் கடனுக்கு சிகரெட் தர மறுப்பு செய்வதறியாத குழந்தைகள் செம்பட்டு சாலையில் வீடுகளை அகற்றியபோது, வீடுகளை இழந்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கினர். அப்போது அவர்களது குழந்தைகள், தாம் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையை அறியாமல் செல்போனில் விளையாடியபடியே இருந்தனர்.

Related Stories: