×

காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

 

கொழும்பு: காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக செப்.28, அக்.9ல் 29 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 29 மீனவர்களில் 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு படகு உரிமையாளருக்கு 6 மாத சிறையும் 12 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Colombo ,Sri Lankan Navy ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்