×

பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 188 பேர் உயி​ரிழப்பு : அவசரநிலை பிரகடனம்

மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 188 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 127 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

பிலிப்​பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்​கொண்ட பேரிடர்​களில் மிக மோச​மான பேரிட​ராக இது கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் மத்​திய பிராந்​தி​யத்​தில் கல்​மேகி புயலுக்கு 188 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் பெரும்​பாலானோர் வெள்​ளத்​தில் மூழ்கி இறந்​தனர். 127 பேரை காண​வில்​லை.கல்​மேகி புய​லால் சுமார் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஏற்​கெனவே நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்​துள்​ளனர். இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் அதிபர் பெர்​டி​னாண்ட் மார்​கோஸ் ஜூனியர் நேற்று அந்​நாட்​டில் அவசர நிலையை பிரகடனம் செய்​தார். அவசர நிதியை அரசு விரை​வாக வழங்​க​வும், உணவுப் பதுக்​கல், அதிக விலை நிர்​ண​யம் ஆகிய​வற்றை தடுக்​க​வும் இது உதவும் என கூறப்​படு​கிறது.

Tags : Kalmagi storm ,Philippines ,MANILA ,STORM ,KALMEGI ,CENTRAL PHILIPPINES ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்