நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடையில்லை: ஐகோர்ட்

 

சென்னை: நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாயகன் மறுவெளியீட்டுக்கு தடை கோரி எஸ்.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் வழக்கு தொடர்ந்தார். நாயகன் பட வெளியீட்டு உரிமையை ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2023ல் பெற்றோம். பட வெளியீட்டு உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் வி.எஸ். பிலிம் நிறுவனம் மூலம் மறுவெளியீடு செய்கிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே நாயகன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: