ஈரோட்டில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.7: ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் பாஜ மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சண்முகபிரியா தலைமை தாங்கினார். சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.  கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் புனிதம், சிவசங்கர், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ரதி ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: