×

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: வரும் 22 மற்றும் 23 தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் ஜி-20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. ஆப்பிரிக்காவின் மண்ணில் முதன் முறையாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், தென் ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்ள மாட்டேன். தென்னாப்பிரிக்கா இனி ஜி-20 கூட்டமைப்பில் கூட இருக்கக்கூடாது. அங்கு அந்த உச்சி மாநாடு நடக்கக்கூடாது.நான் செல்ல மாட்டேன் என்பதை அவர்களிடம் சொல்லி விட்டேன். தென்னாப்பிரிக்காவில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவதை விரும்பவில்லை என்றார்.

Tags : G-20 ,South Africa ,US ,President Trump ,New York ,G-20 summit ,Johannesburg, South Africa ,US President Trump ,
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...