திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

திருத்துறைப்பூண்டி, ஜன.4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீராலத்தூர் ஊராட்சியில் உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 27ம் சனிஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்நிலையில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நேற்று காலை முதல் இரவு வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். சனிப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் மற்றும் லட்சார்ச்சனையில் நேரடியாகவும், கோயில் இணைய வங்கி கணக்கில் தொகை செலுத்தி முன்பதிவு செய்த 700க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பிரசாதம் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்று செயல் அலுவலர் சுரேந்தர் தெரிவித்துள்ளார். விழாவில் எஸ்.பி துரை உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் எஸ்.ஜக்கள் சத்யா, ஓவியா மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: