திரளான பக்தர்கள் தரிசனம் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூர், ஜன.4: புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. மேலும் இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் கட்டிட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கடந்த 2 தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழையானது நேற்று காலை வரையில் விடாது பெய்தது. அதன் பின்னர் நேற்று பகல் நேரத்திலும் அவ்வப்போது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.  மேலும் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன. மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் வியாபாரமும் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Related Stories: