“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” – விசிக தலைவர் திருமாவளவன் சபதம்

தருமபுரி : “முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “திமுக நிர்வாகிகளின் களப்பணிக்கு ஈடாக விசிக நிர்வாகிகளும் உழைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் மு.க.ஸ்டாலினை மீண்டும் அமர வைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட சட்டப்பேரவைத் தேர்தலில் பெறப்போகும் வெற்றிதான் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 234 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணிதான் வெல்ல வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: