உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்: திருமாவளவன்

 

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். பழங்குடி மக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இருக்க வாய்ப்பில்லை. எஸ்.ஐ.ஆர். குறித்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரபு நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம்கள் பலரும் எஸ்ஐஆரின் போது ஊர் திரும்ப முடியாததால் நீக்கப்படக் கூடும். தற்போதைய வாக்காளர் பட்டியலை 2002-2004 பட்டியலோடு பொருத்தி பார்த்ததில் 40% பெயர்களே முழுமையாக இருக்கும். 10 முதல் 20% வாக்காளர்கள் பெயர் விடுபட்டுப்போகும். சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர் விடுபட்டுப்போகும்

Related Stories: