வன்னியர் சங்க நிர்வாகி கொலை 9 பேருக்கு ஆயுள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர வன்னியர் சங்க தலைவர் கண்ணன் (27).இவருக்கும் கலைஞர் நகரை சேர்ந்த கதிரவனுக்கும் (41) டிபன் கடையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17.8.2022ல் கண்ணன், நண்பர் ரஞ்சித்துடன் டூ வீலரில் மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது கதிரவன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் கதிரவன் உட்பட 22 பேரை கைது செய்தனர். இந்நிலையில் 20.3.2024ல் இந்த வழக்கில் தொடர்புடைய அஜித்குமார் (26) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கண்ணன் சகோதரர் மில்கி (எ) சந்திரமோகன் உட்பட 11 பேர் கைதாகி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் கொலை வழக்கை நீதிபதி சத்தியமூர்த்தி விசாரித்து கதிரவன்(41), தேவா (எ) மகாதேவன்(30), சேது(26), சந்தோஷ்(21), திவாகர்(26), கார்த்திக்(30), சுபாஷ் சந்திரபோஸ்(29), ஹரிஷ்(25), பிரித்விராஜ்(31) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மீதமுள்ள 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: