மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

 

நெல்லை: நெல்லை பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிமுக அதிருப்தி தலைவர்கள் அணி திரண்டுள்ளனர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி.தினகரன் ஆகியோர் சந்தித்து பேசினர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லை பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்; மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று கூறினார்.

 

Related Stories: