திசையன்விளை உலக மீட்பர் ஆலய பங்கின் பொன்விழா கொண்டாட்டம் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் பங்கேற்பு

திசையன்விளை, டிச. 31:  திசையன்விளையில் நடந்த உலக மீட்பர் ஆலய பங்கு பொன்விழா கொண்டாட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் பங்கேற்றார்.  1970ம் ஆண்டிற்கு முன்னர் வரை கூட்டப்பனை பங்கின் கீழ் செயல்பட்டு வந்த  திசையன்விளை பங்கு நிர்வாகம் 1970ல்  திசையன்விளை தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடைத்து பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வருகைதந்த தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபனுக்கு மேளதாளம் முழங்கவும், வாணவேடிக்கையுடனும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வழிநெடுகிலும் சிறுமிகள் மலர்களை தூவியபடி வரவேற்றனர். இதே போல் பல்வேறு அன்பியங்கள் சார்பில் ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

 இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், செயலாளர் நார்பர்ட் தாமஸ், சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரவிபாலன், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண்பிரிட்டோ, பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ், தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநர் பெஞ்சமின், பங்குத்தந்தைகள் டொமினிக் அருள் வளன் (உவரி), சகாயராஜ் (மன்னார்புரம்), ஜார்ஜ் ஆலிபன் (துரைகுடியிருப்பு), விக்டர் சாலமோன் (கடகுளம்), இருதயராஜ் (கொழுந்தட்டு), வெனி இளங்குமரன் (பொத்தக்காலன்விளை), பிரான்சிஸ் (சேவியர்புரம்), ஜெகதீஷ் (கீழ வைப்பார்), பிரைட் (கூட்டப்பனை), லாரன்ஸ் (வள்ளியூர்), செல்வரத்தினம் (அணைக்கரை) மற்றும் அருட்தந்தைகள் அந்தோனிராஜா, செல்வராஜ், ஜேம்ஸ் விக்டர், அமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பலியை தொடர்ந்து பொன்விழா மலரை ஆயர் ஸ்டீபன் வெளியிட்டார்.  ஏற்பாடுகளை பங்குத்தந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: