சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நாளை (29ம் தேதி) மாலை 4 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
அவர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். அதில் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் வருகின்ற 2ம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
