மோன்தா புயல் ஆந்திராவில் 123 ரயில்கள் ரத்து

திருமலை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மோன்தா புயல் இன்று இரவுக்குள் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் கடற்கரையில் மணிக்கு 90-110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோன்தா புயல் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ புயல் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’’ என உத்தரவிட்டார். மோன்தா புயல் காரணமாக ரயில்வே துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் 29ம் தேதி வரை விசாகப்பட்டினம் வழியாக செல்லும் 43 ரயில்களை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தென் மத்திய ரயில்வே 80 ரயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: