மடகாஸ்கரில் முன்னாள் அதிபரின் குடியுரிமை பறிப்பு

ஜோகன்னஸ்பர்க்: மடகாஸ்கரில் அதிபரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிபரான ராஜோலினா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுவதுமாக தெரியவில்லை. மேலும் அவரிடம் பிரான்ஸ் குடியுரிமையும் உள்ளது. இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமர் ஹெரிண்ட்சலமா அனைத்து மடகாஸ்கர் மக்களுக்கும் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை இருந்தால் அவர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டங்களை இயற்றும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜோலினாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

Related Stories: