சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டெல்லி: மோந்தா புயல் சென்னைக்கு 560 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு 620 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டுனத்துக்கு 650 கி.மீ தொலைவிலும், அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 810 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மோந்தா புயல் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது.

புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு நோக்கி நகரும். மோந்தா புயல் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா கடற்கரையை நோக்கி மோன்தா புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: